Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலண்டன் பள்ளி மீது மோதிய கார்; 8 வயது சிறுமி மரணம்; பெண் கைது

பள்ளி மீது மோதிய கார்; 8 வயது சிறுமி மரணம்; பெண் கைது

1 minutes read

லண்டன், விம்பிள்டனில் என்னுமிடத்தில் அமைந்துள்ள பள்ளி கட்டிடம் ஒன்றில் Land Rover கார் மோதி விபத்திற்குள்ளானதில் 8 வயதுச் சிறுமி ஒருவர் மரணித்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் Selena Lau என்ற சிறுமியே மரணித்துள்ளார் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து குறித்த பள்ளி கட்டிடத்தில் மோதியதில் 7 மாத குழந்தை, மற்றொரு எட்டு வயது சிறுமி,
40 வயது பெண் என 16 பேர் இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நிலையில், அவர்களில் 10 பேர் மருத்துவமனைகலில் அனுமதிக்கபட்டுள்ளார்கள்.

இதில் 40 வயது பெண்ணின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவிக்கிறது.

இதனையடுத்து, கார் ஓட்டுநரான 46 வயதுடைய பெண் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேலும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More