December 2, 2023 11:34 am

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவில் முத்தரப்பு மாநாடு

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் வருகிற 18ஆம் தினதி முத்தரப்பு மாநாடு நடைபெற உள்ளது.

இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளின் உயர்மட்ட தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதற்காக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா அமெரிக்கா செல்ல உள்ளார்.

முன்னதாக கடந்த மே மாதம் ஜப்பானில் நடந்த ஜி7 மாநாட்டின்போது முத்தரப்பு உச்சி மாநாடு நடைபெற்றது.

எனினும் சர்வதேச நிகழ்வுகளுக்கு இடையே அல்லாமல் தனியாக நடைபெறும் முதல் உச்சி மாநாடு இதுவாகும்.

இந்த மாநாட்டில் வடகொரியாவில் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை சமாளிக்க முத்தரப்பு நாடுகளின் ஒத்துழைப்பு, பாதுகாப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்