செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்ஆசியா 9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த மாணவன்

9 முறை பாம்பு கடித்தும் உயிர் பிழைத்த மாணவன்

1 minutes read

கர்நாடக மாநிலம், தாலுகா ஹலகார்த்தி கிராமத்தை சேர்ந்த விஜயகுமார்-உஷா தம்பதியின் மகன் பிரஜ்வல் (வயது 14). அங்கு உள்ள பாடசாலையில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி பிரஜ்வல் வீட்டு பின்புறம் சிறுநீர் கழிக்க சென்ற போது, பாம்பு கடித்தது. இதையடுத்து வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் 3 நாட்களுக்கு பிறகு மீண்டும் அவனை பாம்பு கடித்தது. இவ்வாறு அவனை தொடர்ந்து 6 முறை பாம்பு கடித்தது.

3 முறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று குணமான பிரஜ்வல் 3 முறை நாட்டு மருந்து சிகிச்சையும் எடுத்து உள்ளான். இதனால் பயந்துபோன அவனது பெற்றோர் சித்தாப்பூருக்கு இடம்பெயர்ந்தனர்.

அங்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினர். அதன் பின்னரும் 2 முறை பாம்பு சிறுவன் பிரஜ்வலை கடித்துள்ளது. அதற்கும் அரசு வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான்.

இந்நிலையில், கடந்த 27ஆம் திகதியன்று 9ஆவது முறையாகவும் பிரஜ்வலை பாம்பு கடித்தது. தற்போது அவன் கிம்ஸ் அரசு வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வருகிறான். தற்போது அவன் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை அந்த பாம்பை பிரஜ்வலை தவிர வேறு யாரும் பார்க்கவில்லை. இதையடுத்து விஜயகுமார்-உஷா தம்பதி, நாக தேவதைக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்த முடிவு செய்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.