December 7, 2023 7:36 am

இந்திய வம்சாவளி என்பதில் பெருமை: பிரதமர் ரிஷி சுனக்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
பிரதமர் ரிஷி சுனக்

‘ஜி-20’ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் இந்தியா வரவுள்ளார்.

இந்நிலையில், அவர் பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பல்வேறு விடயங்கள் குறித்து பேசினார்.

அவர் பேசுகையில், “இந்திய வம்சாவளி என்பதிலும், இந்தியாவுடனான எனது தொடர்புகள் குறித்தும் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

“உங்களுக்கு தெரியும், என் மனைவி ஓர் இந்தியர். அதோடு, பெருமைமிக்க இந்துவாக இந்தியா மற்றும் இந்திய மக்களுடன் எனக்கு எப்போதும் தொடர்பு இருக்கும். நான் இங்கிலாந்து பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு இந்திய மக்களிடம் இருந்து பெரும் வரவேற்பு கிடைத்தது.

“பிரதமர் ஆன பிறகு நான் செய்த முதல் காரியங்களில் ஒன்று, பிரதமர் அலுவலககத்தில் இந்திய வம்சாவளிகளுடன் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியது. அரசியலை குடும்பத்தில் இருந்து பிரித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

‘ஜி-20’ மாநாட்டுக்காக மனைவி அக்ஷதாவுடன் இந்தியாவுக்கு பயணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. சிறுவயதில் நாங்கள் சென்ற சில இடங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

“பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பல்வேறு உலகளாவிய சவால்களை கையாள்வதில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான ஒத்துழைப்பு எவ்வாறு உதவுகிறது என்பது குறித்து ஆலோசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

“உலக பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவது முதல் பருவநிலை மாற்றத்தை கையாள்வது வரை உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள ‘ஜி-20’ தலைவர் பதவியின் மூலம் இந்தியாவுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றுவோம்.

“இங்கிலாந்தில் எந்த விதமான பயங்கரவாதத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது, வன்முறை, பிளவுபடுத்தும் சித்தாந்தங்கள் எதுவாக இருந்தாலும், அவற்றை எதிர்க்க வேண்டிய கடமையை நான் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறேன்.

“அந்த வகையில் காலிஸ்தான் சார்பு பயங்கரவாதத்தின் அச்சுறுத்தலைச் சமாளிக்க இந்திய அரசாங்கத்தில் உள்ள எங்கள் கூட்டாளிகளுடன் நாங்கள் நெருக்கமாக பணியாற்றி வருகிறோம்.” என்றார் பிரதமர் ரிஷி சுனக்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்