September 22, 2023 6:37 am

மட்டக்களப்பில் கோர விபத்து! இருவர் பரிதாப மரணம்!!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

மட்டக்களப்பு – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, மற்றுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, காத்தான்குடியில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற வாகனம் வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில் 4 வயது பெண் குழந்தை, வான் சாரதி (வயது 54) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் விபத்தில் படுகாயமடைந்த 49 வயது பெண் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரின் சடலங்களும் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்