December 9, 2023 9:37 pm

ஐ.நா அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுக்கும் இஸ்ரேல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
ஐ.நா அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுக்கும் இஸ்ரேல்

ஐக்கிய நாடுகள் ஸ்தாபன அதிகாரிகளுக்கு விசா வழங்க இஸ்ரேல் மறுத்து வருகிறது.

ஹமாஸின் தாக்குதல் காரணம் இல்லாமல் நடக்கவில்லை என்று ஐ.நா தலைமைச் செயலாளர் அன்ட்டோனியோ குட்டெரெஸ் கூறியிருந்தார்.

அதேவேளை, ஹமாஸின் தாக்குதல்களுக்கு அவர் கண்டனம் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் ஸ்தாபன பிரதிநிதிகளுக்கான விசா விண்ணப்பங்களை நிராகரிக்கத் தொடங்கியிருக்கிறது.

குட்டெரெஸ் பதவி விலக வேண்டும் என்று பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் இஸ்ரேல் வலியுறுத்தியது.

இதனையடுத்து அரசதந்திர முறையில் பூசலுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று குட்டெரெஸ் வலியுறுத்தினார்.

ஹமாஸின் பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்துவது போன்று தம்முடைய கருத்துகள் புரிந்து கொள்ளப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அது தவறானது என்றும் தமது கருத்து அதற்கு மாறானது என்றும் குட்டெரெஸ் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி : ஐ.நா தலைமைச் செயலாளர் பதவி விலகவேண்டும்: இஸ்ரேல் வலியுறுத்தல்

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்