காஸாவை சேர்ந்த பாலஸ்தீனர்கள் யாரும் இனிமேல் இஸ்ரேலில் இருக்க மாட்டார்கள் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேலில் வேலை பார்க்கும் காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கும் சிக்கல் எழுந்துள்ளது.
இதற்குமுன்னதாக, காஸா நகரை முழுமையாகச் சுற்றி வளைத்துவிட்டதாக இஸ்ரேல் அறிவித்தது.
இஸ்ரேலியப் படையினர் கடந்த சில நாள்களாகக் காஸாவில் தரைத் தாக்குதலை நடத்தி வருகின்றனர்.
Salah al-Din எனும் முக்கிய வீதியைப் பயன்படுத்தி, இஸ்ரேலியப் படை காஸாவின் நகர்ப்பகுதியை நோக்கிச் செல்கிறது.
தொடர்புடைய செய்தி : 24 மணி நேரத்தில் காஸாவில் 700க்கும் மேற்பட்டோர் பலி!
இந்நிலையிலேயே, இஸ்ரேலில் வேலை செய்யும் பாலஸ்தீனர்கள் அனைவரும் காஸா வட்டாரத்துக்குத் திருப்பி அனுப்பப்படுவர் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
காஸா வட்டாரத்துடன் அனைத்துத் தொடர்புகளையும் முற்றாகத் துண்டிப்பதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதேவேளை, காஸாவுக்குள் வரும் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் அனைவரும் சடலங்களாக நாடு திரும்புவர் என்று ஹமாஸ் குழு மிரட்டல் விடுத்துள்ளது.