இஸ்ரேல்- ஹமாஸ் படை இடையே போர் உச்சக் கட்டத்தை அடைந்துள்ளதால் பாலஸ்தீனர்களின் வேலை உரிமத்தை இஸ்ரேல் இரத்துச் செய்துள்ளது.
இதனால் இஸ்ரேலில் வேலை பார்த்து வந்த சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் வெளியேறியுள்ளனர்.
இதையடுத்து, வேலை வாய்ப்புக் கொள்கைகளில் இஸ்ரேல் அரசு திடீர் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
தொடர்புடைய செய்தி : இஸ்ரேலில் வேலை பார்க்கும் காஸாவைச் சேர்ந்த பாலஸ்தீனர்களுக்கும் சிக்கல்
இதன்மூலம், சுமார் 1 இலட்சம் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது.
அவர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் இஸ்ரேல் கட்டுமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு இந்தியா ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா சபையில் இஸ்ரேல் போர் நிறுத்தம் தொடர்பாக கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவிக்காமல் இந்தியா புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.