இங்கிலாந்தில் 3 கட்டங்களாக தளர்த்தப்படவுள்ள ஊரடங்கு சட்டம்.

இங்கிலாந்தில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த, மார்ச் இறுதியில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை, 3 கட்டங்களாக தளர்த்த அந்நாட்டு அரசு முடிவெடுத்துள்ளதாக பிரபல டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது.

அதில், முதல் கட்டமாக, சிறிய கடைகள் மற்றும் கட்டுமாணப் பணிகளை தொடங்கவும், இரண்டாம் கட்டமாக அதிக என்ணிக்கையில் மக்கள் பணியாற்றும் ஷாப்பிங் மால்கள் மற்றும் அலுவலகங்களை திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக, உணவகங்கள், மதுக்கூடங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகளை திறக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்