1 வயது பெண் குழந்தைக்கு திடீரென மாரடைப்பா

பிரித்தானியாவில் வீட்டில் இருந்த 1 வயது பெண் குழந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த நிலையில் இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியாமலேயே உள்ளது.

Elaina Rose Aziz என்ற 1 வயது குழந்தை தான் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கடந்த 6ஆம் திகதி Elaina-க்கு வீட்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

பின்னர் குழந்தையை மருத்துவமனைக்கு தூக்கி சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்த மரணத்தில் சதி வேலை இருக்கலாம் என்ற சந்தேகத்தில் 34 வயது ஆண் மற்றும் 25 வயது பெண்ணை பொலிசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர், ஆனால் அவர்களிடம் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Elainaவின் பிரேத பரிசோதனை அறிக்கையில் அவள் மரணத்துக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.

அதே நேரம் கூடுதல் முடிவுகளுக்காக அதிகாரிகள் காத்திருக்கிறார்கள். பொலிசார் கூறுகையில், எங்கள் விசாரணை ஆரம்ப கட்டத்தில் தான் உள்ளது.

என்ன நடந்தது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை என கூறியுள்ளனர்.

Elainaவின் குடும்பத்தார் கூறுகையில், எங்கள் அழகான பெண் குழந்தை Elaina இழப்பில் எங்கள் முழு குடும்பமும் முற்றிலும் மனம் உடைந்துவிட்டது.

அவள் என்றென்றும் நம் இதயத்திலும் மனதிலும் இருப்பாள் என உருக்கமாக கூறியுள்ளனர்.

ஆசிரியர்