நிரந்தர தொற்றுநோய் கொரோனா | பிரித்தானிய அறிவியலாளர்

கொரோனா எப்போதுமே நிரந்தரமாக இருந்துகொண்டுதானிருக்கும் என்று கூறியுள்ள அறிவியலாளர் ஒருவர், அதை எதிர்கொள்வது எப்படி என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

பேராசிரியர் Sir Mark Walport என்னும் பிரித்தானிய அரசின் அறிவியல் ஆலோசகர், எப்படி ப்ளூவுக்கு அவ்வப்போது தடுப்பூசி போட்டுக்கொள்வோமோ அதேபோல், கொரோனாவுக்கும் மீண்டும் மீண்டும் தடுப்பூசி போட்டுக்கொள்வதுதான் கொரோனாவை எதிர்கொள்ளும் ஒரே வழி என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் பெரியம்மை நோயை ஒழித்ததுபோல கொரோனாவை தடுப்பூசியால் ஒழிக்கமுடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வைரஸ் எப்போதுமே நம்முடனே இருக்கப்போகிறது என்று கூறியுள்ள பேராசிரியர் Mark Walport, அதனால் மீண்டும் மீண்டும் தடுப்பூசி போடப்படுவது அவசியம் என்கிறார்.

மீண்டும் கொரோனா தொற்று நிலைமை கைமீறிப்போகலாம் என்றும் எச்சரித்துள்ள அவர், இனி மொத்தமாக ஊரடங்கு என்பதுபோன்ற நடவடிக்கைகளை எடுப்பதைக் காட்டிலும், இலக்கு வைத்து நடவடிக்கைகள் எடுப்பதே பயனுள்ளதாக இருக்கும் என்கிறார் அவர்.

ஆசிரியர்