இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தம்

இலங்கையுடனான இரட்டை வரி தவிர்ப்பு ஒப்பந்தத்திற்கான திருத்தங்களுக்கு இந்தியாவின் மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் தற்போது நடைமுறையில் உள்ள இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் 2013 ஜனவரியில் கையெழுத்திடப்பட்டு அதே ஆண்டு ஒக்டோபரில் நடைமுறைக்கு வந்தது.

இந்நிலையில் இரட்டை வரிவிதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருமான வரி மீதான நிதி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தத்தில் திருத்தம் செய்யும் நெறிமுறையில் கையெழுத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

இந்தியாவுக்கு இலங்கை தரவேண்டிய 120 மில்லியன் கடன்களை திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

ஆசிரியர்