புதிய முறையில் கொரோனா விழிப்புணர்வு…..

தமிழ் நாட்டில்  கொரானா  பரவலை தடுக்க, சமூக நலதுறை தீவிர முயற்சிகளை மேற்கொண்டு, நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதில் தமிழ்நாடு ஓவியர் சங்கம் தங்களது பங்காக கொரானா பரவலை தடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,  சாலைகளில் கொரானா விழிப்புணர்வு ஓவியங்களை எழுதி வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட  இடங்களில்,  சாலைகளில் ஓவியங்களை வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள்.
 தமிழ நாடு ஓவியர் சங்கம் மற்றும் நீலகிரி மாவட்ட  ஓவியர் சங்கத்தை சேர்ந்த  10 ஓவியர்கள் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 ஊட்டி சேரிங்கிராசில் வரைந்து  உள்ள  ஓவியம் பலரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஆசிரியர்