சிக்கிம் மாநிலத்தின் நாகு-லா பகுதியில் அமைந்துள்ள எல்லையில் நேற்று (சனிக்கிழமை) வழக்கம்போல இந்திய வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அச்சமயம் இந்திய மற்றும் சீனப் படைகளுக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டது.
அப்போது, அங்கு ரோந்துப் பணிக்காக வந்த சீனப் படையினர், இது தங்கள் நாட்டிற்குச் சொந்தமான பகுதி எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்திய-சீன பாதுகாப்புப் படையினர் மாறிமாறி கற்களை வீசித் தாக்குதல் மேற்கொண்டனர். மேலும், இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கைகளால் தாக்கிக்கொண்டு சண்டையில் ஈடுபட்டனர்.