Tuesday, April 23, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்அமெரிக்கா ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றால் விசா ரத்து…..

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்றால் விசா ரத்து…..

1 minutes read

F1 விசா பெற்று அமெரிக்காவில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் மட்டுமே பங்கேற்பதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. அவ்வாறு பங்கேற்றால் அவர்களது விசா ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் கல்வி பயில்வதற்காக F1 விசா பெற்று ஏராளமான மாணவர்கள் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் பல்வேறு பல்கலைக் கழகங்களில் படித்து வருகின்றனர். இவர்களில் அதிக இந்திய மாணவர்கள் உள்ளனர். இந்த நிலையில், F1 விசா மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் ஆன்லைன் வகுப்புகளில் மட்டும் பங்கேற்கும் நிலை இருக்கக்கூடாது என தெரிவித்துள்ள ட்ரம்ப் அரசு, அதற்கு தடை விதித்துள்ளது.

இந்த விதியை பின்பற்றாதவர்கள் மீண்டும் தாயகத்திற்கு செல்லும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது இந்திய மாணவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, நேரடியாக அமெரிக்க அரசிடம் பேசியுள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More