இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை.

நேபாள நாட்டில் இந்தியாவின் அனைத்து தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டு உள்ளது.

அண்டை நாடான நேபாளத்துடன் ஏற்பட்டுள்ள எல்லை முரண்பாட்டால், இருநாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நேபாள நாட்டின் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு எதிராக உள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன, இந்நிலையில், நேபாள அரசுக்கு எதிராகத் தவறான பிரச்சாரங்களை மேற்கொள்வதாகக் கூறி, தூர்தர்ஷனை தவிர அனைத்து இந்திய தனியார் செய்தி சேனல்களுக்கும் தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்