கொரானா பாதிப்பா?| நான் நலமாக இருக்கிறேன் | ப.சிதம்பரம்

சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.நான் நலமாக இருக்கிறேன்- ப.சிதம்பரம் தகவல்

சீனாவில் உருவாகி பல்வேறு நாடுகளுக்கும் பரவிய உயிர்க்கொல்லி நோய்க்கிருமியான கொரோனா உலகையே அச்சுறுத்தி வருகிறது.

அனைத்து தரப்பு மக்களும் கொரோனா நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். மக்கள் நல பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட கலெக்டர்கள், எம்.எல்.ஏ.க்கள். எம்.பி.க்கள், அமைச்சர்களையும் கொரோனா விட்டுவைக்கவில்லை.

இந்நிலையில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லை என்றும், வீட்டில் தனிமையில் இருப்பதாகவும் கார்த்தி சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சிவகங்கை தொகுதியில் உள்ள மானகிரி இல்லத்தில் நான் நலமாக இருக்கிறேன் என்று ப.சிதம்பரம் எம்.பி. தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா உறுதியான கார்த்தி சிதம்பரம் சென்னையில் நலமாக இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்