தமிழகத்தில் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள் இன்று முதல் திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இறை வழிபாட்டு தலங்களில் நேற்று சுத்தம் செய்து, சீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. இதற்கான பணிகளில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இதேநேரம், வழிபாட்டு தலங்களில் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் பிறப்பித்துளள்ளார்.

இந்த நிலையில், சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் மூடப்பட்டிருந்த வழிபாட்டு தலங்கள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக பழனி, திருச்செந்தூர், திருத்தணி முருகன் கோயில்களில் தனிநபர் இடைவெளியுடன் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்