Sunday, September 19, 2021

இதையும் படிங்க

பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ள நிலையில் பால்மா இறக்குமதி நிறுவனங்களால் அதன் விலையை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த...

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாம்!

நாட்டின் சுதந்திரம், அபிமானம் ஆகியவற்றின் மீது தலையிட சர்வதேசத்திற்கோ, சர்வதேச நிறுவனங்களுக்கோ இடமளிப்பதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர்...

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகிழ்ச்சியாம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை! | விசேட வைத்திய நிபுணர்கள்

 நாட்டில் பயணக்கட்டுப்பாடுகள் அமுலில் இருப்பதால் கோவிட் வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகின்றது என்று விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்தார்.

ஆசிரியர்

இந்தியாவில் கொரோனா 3வது அலையை தடுக்க தமிழக அரசு தீவிரம்!

சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. இதனால் ஊரடங்கு தளர்வுகளும் படிப்படியாக வழங்கப்பட்டு உள்ளன.

கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில் 10-வது முறையாக நாளை முதல் தளர்வுகளுடன் ஊரடங்கு 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ஊரடங்கு தளர்வு காரணமாக கடை வீதிகளில் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மீன் மார்க்கெட், இறைச்சி கூடங்களிலும் கூட்டம் அலைமோத தொடங்கி விட்டன.

இதனால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து விடுமோ என்ற அச்சம் ஏற்பட தொடங்கி உள்ளது. பல இடங்களில் மளிகை கடைக்காரர்கள், டீ கடைக்காரர்கள், வியாபாரிகள் பலர் முக கவசம் அணியாமல் அலட்சியமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிட்டனர்.

கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள்தான் முகக்கவசம் அணியும் நிலை பல இடங்களில் காணப்படுகிறது. இதனால் இவற்றை கண்காணித்து கட்டுப்படுத்த அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் எந்தெந்த கடை வீதிகளில் கூட்டம் அதிகமாக காணப்படுகிறதோ அங்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாத கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகளிலும் அதிகாரிகள் இறங்கி உள்ளனர்.

வணிக பகுதிகளை கண்காணிக்க போலீசாரும், அதிகாரிகள் குழுவினரும் அவ்வப்போது ரோந்து சுற்றி வருகின்றனர்.

இந்த நிலையில் கொரோனா 3-வது அலை ஏற்பட்டால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருவதால், அதை முன்கூட்டியே சமாளிக்க மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி தமிழகம் உள்பட 6 மாநில முதல் மந்திரிகளுடன் நேற்று முன்தினம் காணொலியில் பேசினார்.

அப்போது தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விரிவாக எடுத்துரைத்தார்.

இந்த நிலையில் இன்று அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை செயலாளர் இறையன்பு காணொலி வாயிலாக விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது மாடியில் உள்ள கூட்டரங்கில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களையும் தொடர்புகொண்டு தலைமை செயலாளர் காணொலியில் பேசினார். கொரோனா பரவல் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அது பரவாமல் தடுக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று விரிவாக கேட்டறிந்தார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுவரை எவ்வளவு பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இன்னும் எவ்வளவு பேருக்கு தடுப்பூசி போடப்பட வேண்டும் என்ற விவரங்களும் கேட்டறியப்பட்டன.

பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, கேரளா மட்டுமின்றி மகாராஷ்டிரா மாநிலத்திலும் கொரோனா மீண்டும் அதிகம் பரவுவதால் தமிழகத்தில் என்னென்ன முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

கொரோனா 3-வது அலை வராமல் இருக்க காய்ச்சல் முகாம்களை அதிகரிப்பது, சுகாதார பணியாளர்களை முடுக்கி விடுவது போன்ற பணிகளை தீவிரப்படுத்தும் படியும் கேட்டுக்கொண்டார்.

குறிப்பாக மார்க்கெட், கடைவீதிகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று பரவாமல் தடுக்க கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இதற்காக அதிகாரிகள் குழுக்களை அமைத்து அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தவும் கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக ஒவ்வொரு மாவட்ட கலெக்டர்களும் தங்களது மாவட்டங்களில் எடுத்துள்ள நடவடிக்கைகளை விளக்கி கூறினார்கள்.

இந்த கூட்டத்தில் வருவாய் பேரிடர், மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உணவு, கூட்டுறவுத் துறை கூடுதல் தலைமை செயலாளர் நசீமுதின், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயின், சென்னை மாநகராட்சி கமி‌ஷனர் ககன்தீப்சிங் பேடி, குடும்ப நலத்துறை சிறப்புப் பணி முதன்மை செயலாளர் செந்தில்குமார், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமி‌ஷனர் சங்கர்ஜிவால், சிவில் சப்ளை பாதுகாப்புத் துறை கமி‌ஷனர் ஆனந்தகுமார்.

தேசிய சுகாதார மி‌ஷன் இயக்குனர் டாரஸ் அகமது, பொதுத்துறை செயலாளர் ஜெகநாதன், சிவில் சப்ளை துறை நிர்வாக இயக்குனர் ராஜாராமன், உங்கள் தொகுதியில் முதல் -அமைச்சர் துறை சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷ், கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முக சுந்தரம், தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா, தமிழ்நாடு மருத்துவ கழக நிர்வாக இயக்குனர் தீபக் ஜேக்கப் ஆகிய மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். இவர்களுடன் மருத்துவத் துறை இயக்குனர்களும் பங்கேற்றனர்.

இதையும் படிங்க

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

அரசியல் கைதிகளின் கோரிக்கையை அரசாங்கம் உடனடியாக பரீசிலனை செய்ய வேண்டும்!

அநுராதபுர சிறைச்சாலை சம்பவம் கண்டிக்கதக்கதும், அதேநேரத்தில் இலங்கைக்கு அவ பெயரை ஏற்படுத்தும் செயலாகும் என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

உள்ளாடைக்கும் தட்டுப்பாடா? | நிலாந்தன்

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்தாகி விட்டதா ?என்று இந்திய ஊடக நண்பர் ஒருவர் கேட்டார். நாட்டின் பொருளாதாரம்...

தொடர்புச் செய்திகள்

ஆசிரியர்

ஆசிரியரிடமிருந்து மேலும் பதிவுகள்

இந்தியா -ஸ்ரீநகரில் பெண் தொழில் முனைவோர் கண்காட்சி!

ஸ்ரீநகர்- காஷ்மீர், ஹத்தில் பகுதியில் மகளிர் தொழில்முனைவோர் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு -காஷ்மீர் கைவினை மற்றும் கைத்தறித் துறையுடன் இணைந்து EREIGNIS ஏற்பாடு...

தந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த மகன்!

தந்தையின் கண் ஒன்றை அவரது மகன், தனது கை விரல்களால் தோண்டி சிதைவடையச் செய்த சம்பவமொன்று வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வாழைச்சேனை- தியாவட்டவான் பாடசாலை...

தமிழகத்தில் இன்று முதல் 2ஆவது கட்ட மெகா தடுப்பூசி முகாம்!

தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 12ஆம் திகதி தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி...

மேலும் பதிவுகள்

இன்றைய ராசிபலன் உங்களுக்கு எப்படி? 18.09.2021

மேஷம்மேஷம்: பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். புதிய கோணத்தில் யோசித்து பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்....

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 87 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா...

சம்பியன்ஸ் லீக்: ரியல் மட்ரிட்- லிவர்பூல், மன்செஸ்டர் சிட்டி அணிகள் வெற்றி!

ஐரோப்பாவின் முன்னணி கால்பந்து கழகங்களுக்கிடையில் நடைபெறும் முதன்மையான கால்பந்து லீக் தொடரான சம்பியன்ஸ் லீக் தொடரின், முதற்கட்ட போட்டிகள் நடைபெற்று வருகின்றன. குழு டி பிரிவில்...

இலங்கையில் மொத்த சனத்தொகையில் 50 வீதமானோருக்கு தடுப்பூசி!

மக்கள் தொகையில் 50% பேருக்கு கொவிட் -19 தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கியிருப்பது நமது நாடென்ற வகையில் எமக்குக் கிடைத்த பெரும் வெற்றியாகும். இந்த வெற்றியில் நாம் அனைவரும் வீரர்கள்....

இலங்கைக்கு மேலும்4 மில்லியன் சினோபோர்ம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன!

இலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் நான்கு மில்லியன் டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளின் இன்று (சனிக்கிழமை) காலை நாட்டை வந்தடைந்துள்ளன. பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு...

இலங்கையில் இன்றும் 212 நிலையங்களில் தடுப்பூசி செலுத்தப்படும்!

அதன்படி நாடளாவிய ரீதியில் 212 நிலையங்களில் தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கை இடம்பெறும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு கொழும்பு,...

பிந்திய செய்திகள்

திடகாத்திரமாக இருக்க, தினமும் முட்டை சாப்பிடுங்க…..!

முட்டையை நீங்க தினமும் சாப்பிடுங்க, இதுக்கு காரணங்கள் சொல்லவேண்டும் என்றால் கூறிக்கொண்டே போகலாம். முட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் நம் அன்றாட உடல் திறனுக்கு...

18 மாதங்களாக கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது!

டெல்லி: கொரோனா தொற்று நாட்டின் பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது என ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் கூறியுள்ளார். நாடு முழுவதும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து...

காலை எழுந்தவுடன் செய்யக்கூடியவை | செய்யக்கூடாதவை

நம் உடல் ஒருநாள் முழுவதும் எப்படி இயங்கப்போகிறது என்பது நாம் காலையில் வெறும் வயிற்றில் முதலில் என்ன சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது....

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து – கடல்வாழ் உயிரினங்களின் மாதிரிகள் ஆய்வுக்காக வெளிநாட்டுக்கு!

கரையொதுங்கிய கொள்கலன்களிலிருந்த பிளாஸ்டிக் மாதிரிகள், பிரித்தானியாவின் லண்டன் நகரிலுள்ள இரசாயன ஆய்வுகூடத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் தர்ஷனி லஹந்தபுர தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது!

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் இதுவரை 15.23 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை...

இலங்கையில் மேலும் ஆயிரத்து 297 பேருக்கு கொரோனா!

இதனையடுத்து, நாட்டில் இதுவரையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 இலட்சத்து 4 ஆயிரத்து 55 ஆக அதிகரித்துள்ளது. இதேநேரம், கொரோனா தொற்றில்...

துயர் பகிர்வு