தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாநிலங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.

இதன்படி குமரி, நெல்லை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன், கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்