செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா 5 ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

5 ஜி சேவையை பிரதமர் மோடி நாளை தொடங்கி வைக்கிறார்

0 minutes read

சமீபத்தில் 5 ஜி அலை கற்றை ஏலத்தை மத்திய அரசு நடத்தியது. இதில் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று ஏலம் எடுத்தது.

நாட்டில் 5 ஜி சேவை விரைவில் அமல்படுத்தப்படும் என்றும் அதை பிரதமர் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்தநிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

இந்திய மொபைல் காங்கிரசின் (ஐ.எம்.சி.) 6-வது பதிப்பையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார். ஐ.எம்.சி. 2022 “புதிய டிஜிட்டல் யுனிவர்ஸ்” என்ற கருப்பொருளுடன் அக்டோபர் 1 முதல் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

5 ஜி தொழில்நுட்பம் தடையற்ற சேவை, உயர் தரவு விகிதம், விரைவான செயல்பாடு ஆகியவற்றுடன் மிகவும் நம்பகமான தகவல் தொடர்புகளை வழங்கும். இது ஆற்றல் திறன், அலைக்கற்றை திறன் மற்றும் நெட்வொர்க் செயல் திறனை அதிகரிக்கும்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.