மகாத்மா காந்தியின் ஜனன தினம் இன்று

1869ஆம் ஆண்டு, ஒக்டோபர் 02 ஆம் திகதி பிறந்த மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1948 ஜனவரி 30 ஆம் திகதி கொல்லப்பட்டார்.

மகாத்மா காந்தியின் ஜனன தினத்தையிட்டு இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான் வெளியிட்ட அறிக்கையில்,

இந்திய சுதந்திரப் போராட்ட வேட்கையை கட்டியெழுப்பியவரும், வெள்ளையனே வெளியேறு என்று  ஆங்கிலேயர்களிடம் இருந்து இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்று தந்தது மகாத்மா காந்தியே. அவர் அனைவராலும் இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

இலங்கை, தென்னாபிரிக்கா, மலேசியா போன்ற பல்வேறுப்பட்ட நாடுகளில் மகாத்மா காந்தியின் கொள்கைகள் பரப்பப்பட்டு இன்றும் பின்பற்றப்படுகின்றன.

மகாத்மா காந்தியால் இலங்கையில் 1939 ஆம் ஆண்டு  இந்திய இலங்கை காங்கிரஸ் நிறுவப்பட்டது .

மகாத்மா காந்தியின் கொள்கையால் ஈர்க்கப்பட்ட அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் தனது மானசீக குருவாக அவரை ஏற்றுக் கொண்டு அவ்வழியிலேயே இ.தொ.காவை முன்னெடுத்தார்.

தொடர்ந்தும்  மகாத்மா காந்தியின் கொள்கையை பின்பற்றியே இ.தொ.கா பயணிக்கிறது.

ஆசிரியர்