மறைந்த ஜானகி MGR இன் பிறந்த தினம் இன்று

இன்றைய தினம் மறைந்த ஜானகி MGR பிறந்த நாள் ஆகும் . எனவே இது தொடர்பாக திமுக, அதிமுக தலைவர்கள் கருத்தை மக்கள் மத்தியில் பகிர்ந்தனர்.

அதிமுகவின் தலை சிறந்த தலைவரும் 3 முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் , பொது கருத்தை மக்களுக்கு திரைப்படங்கள் வாயிலாக சொன்ன மக்கள் திலகமும் , பாரத ரத்ன விருதை பெற்றவருமான MGR மனைவியும் முன்னால் முதலமைச்சரும் , முதல் பெண் முதலமைச்சரும் திரையுலகில் கால் பதித்தவருமாகிய ஜானகி MGR அவர்களின் பிறந்த தின நாளில் ஓ பன்னீர் செல்வன் தியாகராய நகரில் ஜானகி அம்மாவுக்கு உரிய சம்மதத்துடன் சிலை அமைக்க உள்ளதாக கூறியிள்ளார்.

தி.மு.க முகஸ்டாலின் அண்ணாமலைபுரத்தில் உள்ள MGR ஜானகி பாடசாலை விழாவில் கலந்து ஜானகி MGR சிறப்புமலர், ஆவணப்பட குறுந்தகடு , பொன்மனச்செம்மல்MGR நூல் வெளியிட்டார் .

தொடர்ந்து பேசிய அவர் தேசிய இயக்கத்திலிருந்து MGR ஐ தி.மு.கவிற்கு கொண்டு சேர்த்தது கருணாநிதி என்றும் 20 வருட காலம் MGR திமுகாவிலேயே இருந்தார் என்றும்.

ஜானகியின் முதல் திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதியவர் கருணாநிதியென்றும் அதை போல் அவரது கடைசி படத்துக்கும் கதை வசனம் எழுதியவர் கருணாநிதி என்றும் MGR அவரது உயிலில் தனது சொத்துக்களின் வாரிசு ஜானகி என்பதையும் எழுதினார் என்றும் குறிப்பிட்டார் .

ஆசிரியர்