செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவினர்களுக்கு ஆயுள் தண்டனை

1 minutes read

உலகெங்கும் பலதரப்பட்ட பாலியல் கொடுமைகள் நிமிடத்துக்கு நிமிடம் பதிவாகி வருகின்றது. இப்படி ஒரு சிறுமியை பாலியல் வன் கொடுமைக்கு உள்ளாக்கிய குற்றவாளிகளுக்கு போக்ஸோ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.

சென்னையில் மயிலாப்பூரில் 13 வயது சிறுமியை அவரது தாத்தா , 3 சித்தப்பாக்கள் , அவர்களின் மகன்மார் இருவர் என 6 பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இது சிறுமியின் பாடசாலை நிர்வாகம் வாயிலாக புகார்கள் சென்றதன் விளைவால் வழக்கு பதியப்பட்டது பின் விசாரணையில் ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டு சிறப்பு நீதிமன்றமான போக்ஸோ நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது .

தந்தை தாயை பிரிந்து தாத்தாவின் பராமரிப்பில் வாழ்ந்து வந்த சிறுமியே இவ்வாறு வன்கொடுமைக்குள்ளாகி உள்ளத்துடன் குற்றவாளிகளான தாத்தா , 3 சித்தப்பாக்களுக்கு ஆயுள் தண்டனையும் 1 லட்சத்து 40 ஆயிரம் அபரதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு 10 லட்சம் நிவாரணமும் வழங்க தீர்ப்பு அளித்துள்ளது.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More