காங்கிரஸ் வேட்பாளருக்கு கமல் கட்சி ஆதரவால் ஈரோடில் குழப்பம்

கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு வேட்பாளராக தி.மு.க கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்காக பெரியாரின் பேரனுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அதிமுகாவை எதிர்த்து களமிறங்க உள்ளார்.

எனவே இந்த தேர்தலில் தமக்கு ஆதரவை வழங்க வேண்டும் என்று கமலஹாசனை காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டதன் பேரில் வெற்றிக்கு வாழ்த்துக்களை அவருக்கு கூறியிருந்தார்.

பின் இளங்கோவன் 23.01.2023 அன்று நேரடியாக ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்ய கடசி அலுவலகத்துக்கு சென்று ஆதரவை கேட்டிருந்தார்.பின் செயற்குழு கூட்டத்தை கூட்டி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றார் கமல் .

இதன்படி இன்று மக்கள் நீதி மய்ய கட்சி அலுவலகத்தில் கூட்டம் கூட்டி மாநில நிர்வாகிகள்,செயற்குழு நிர்வாக உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசித்ததன் பின் இளங்கோவனுக்கு ஆதரவளிப்பதாக கூறினார்

மேலுமவர் ஈரோடு கிழக்கில் 18 வயது நிரம்பிய அனைவரும் தமது வாக்கை வழங்கி பெரியளவில் வெற்றியை பெற செய்ய வேண்டும் .என்றும் மத கடசிகளை நாம் முழு பலத்தோடு எதிர்ப்போம் என்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

எனினும் பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்று இப்போது எதுவும் கூற முடியாது என்றுள்ளார்.

இதனை தொடர்ந்து கமலஹாசனின் இந்த முடிவால் அதிருப்தி அடைந்த மதுரை மக்கள் மய்ய கடசி நிர்வாகிகள் தனித்து தேர்தலில் களமிறங்குவோம் என்று கோஷங்கள் நிறைந்த போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

மேலும் கமல் ரசிகர்களும் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். ஆனால் இந்த முடிவில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் நன்றியை தெரிவிப்பதாகவும்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்