செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா ஒன்லைன் விளையாட்டு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமை இல்லை | மத்திய அரசு

ஒன்லைன் விளையாட்டு சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உரிமை இல்லை | மத்திய அரசு

1 minutes read

ஒன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் நிறுவனங்கள் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரிய வருவது தமிழகத்தில் ஒன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை விதித்து சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தை எதிர்த்து வழக்கு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

இன்று மத்திய அரசு தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ஒன்லைன் விளையாட்டுகளை தடை செய்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்தது.

மேலும் ஒன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் வகையில் மத்திய அரசு சட்டம் கொண்டு வந்துள்ளதாகவும், இதன்மூலம் ஒன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் நடைபெறுவது தடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதத்தை கேட்டுக்கொண்ட நீதிபதிகள், தமிழக அரசின் பதில் வாதத்துக்காக விசாரணையை ஆகஸ்ட் 1ம் திகதிக்கு தள்ளி வைத்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.