October 3, 2023 12:49 am

சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்கிய விஜயலட்சுமி

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

சீமான் மீதான புகாரை வாபஸ் வாங்கினார் நடிகை விஜயலட்சுமி. சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி பொலீசிடம்  புகார் அளித்திருந்த நிலையில்

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் மீது குற்றச்சாட்டுகளையும் தனது ஆதங்கத்தையும் சமூக வலைதளங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகிறார் இந்நிலையில், வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு வந்த விஜயலட்சுமி, தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார்.

இதுதொடர்பாக விஜலட்சுமி கூறியதாவது: சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார். காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

தனி ஒருவராக போராட முடியவி்ல்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுவதாகவும்,மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன என தெரிவித்துள்ளார்.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்