செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் பிரதமர் ரணில்!

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் பிரதமர் ரணில்!

0 minutes read

 

இலங்கையின் அயல் நாடான இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரசின் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரை புது டில்லியிலுள்ள தாஜ் ஹோட்டலில் சந்தித்து
சிறப்பு கலந்துரையாடல் ஒன்று இன்று இடம்பெற்றது என இந்திய ஊடகங்கள் தெரிவிக்ககிறது.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று மாலை இந்தியாவுக்கு சென்றார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்தித்து இருநாட்டு உறவுகளின் மேம்பாடு தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார்.

இதற்கிடையில், இன்று அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்துப் பேசியுள்ளார்.

இலங்கை பிரதமரின் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என டெல்லி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.