Thursday, May 2, 2024

செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை இலங்கை­யி­ல் 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி!

இலங்கை­யி­ல் 10 வரு­டங்­களில் விபத்­துக்­க­ளினால் 27,000 பேர் பலி!

1 minutes read

இலங்கை­யி­ல் கடந்த பத்­து­ வ­ரு­டங்­களில் 27ஆயி­ரத்து 161பேர் வீதி விபத்­துக்­களில் உயி­ரி­ழந்­துள்­ளனர்.

இது முப்­ப­து­வ­ருட யுத்­தத்தில் உயி­ரி­ழந்­த­வர்­க­ளுக்கு நிக­ரா­ன­தாகும் என எதிர்க்­கட்சி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நிமல் சிறி­பால டி. சில்வா தெரி­வித்தார்.

சார­தி­களின் கவ­ன­யீ­ன­மான நட­வ­டிக்கை கார­ண­மாக கடந்த பத்து வரு­டங்­களில் 27ஆயி­ரத்தி 161பேர் உயி­ரி­ழந்­தி­ருக்­கின்­றனர்.

இந்த உயி­ரி­ழப்­பா­னது கடந்த காலங்­களில் நாட்டில் ஏற்­பட்ட யுத்­தத்­தின்­போது உயி­ரி­ழந்­த­வர்­களின் தொகைக்கு நிக­ரா­னது என்றே தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

வீதி விபத்­துக்கு தண்­ட­னையை அதி­க­ரிப்­பது மாத்­தி­ர­மன்றி விபத்­துக்­களை குறைப்­ப­து­தொ­டர்­பாக வெளி­நா­டு­க­ளுடன் இணைந்து இதனை ஒழுங்­கு­றுத்­தவும் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

இந்த முறை அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நாடு­களில் இருந்து வரு­கின்­றது. இதற்கு பாது­காப்பு துறையின் ஒத்­து­ழைப்பும் தேவை­யாகும்.

அதனால் சாரதி அனுமதி பத்திரத்தை வழங்கும் உரிமையை மோட்டார் வாகன பதிவு தினைணக்களத்துடன் போக்குவரத்து திணைக்களத்துக்கும் வழங்கவேண்டும் என்றார்.

நன்றி – எம்.ஆர்.எம்.வஸீம்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More