முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல்

ஜனாதிபதிக்கு உண்டான அதிகாரத்தின் கீழ் நாடு முழுவதிலும் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படையினரையும் கடமையில் ஈடுபடுத்தும் வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் 12ம் சரத்தின் கீழ் ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் இந்த அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்றைய தினம் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானி அறிவித்தலில், பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆம் பிரிவினால் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் பயனைக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவாகிய நான் முப்படையினரையும், அறிவித்தலில் குறித்து காட்டப்பட்டுள்ள பிரதேசங்களில் பொதுமக்களின் அமைதியைப் பேணுவதற்காக இன்று முதல் நடைமுறைக்கு வருமாறு இந்த கட்டளை மூலம் அழைக்கிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்