கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2437 ஆக அதிகரித்துள்ளது.ஏற்கனவே 2350 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 87 பேர் அடையாளம் காணப்பட்டனர்.

இன்றைய தினம் மாத்திரம் 283 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கந்தக்காடு போதைப்பொருள் மறுவாழ்வு தடுப்பு மையத்தில் மேலும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்