பேரூந்து வண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்துள்ளது.

தெல்தெனிய பகுதியில் தனியார் பேரூந்து  வண்டியொன்று திடீரெனத் தீப்பிடித்துள்ளது.அம்பாறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த தனியார் பஸ் வண்டியே இவ்வாறு தீ விபத்திற்குள்ளானதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.நேற்றிரவு (24) 7.45 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது உடனடியாக செயற்பட்ட பொலிஸாரும் கண்டி மாநகர சபையின் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.இத்தீ விபத்தின்போது எவ்வித உயிர் ஆபத்துகளும் ஏற்படவில்லை என்பதோடு, இத்தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.இது தொடர்பில் தெல்தெனிய பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆசிரியர்