March 26, 2023 11:40 pm

தப்பி ஓடிய கொரோனா நோயாளி திருடிய சைக்கிள் எங்கே??

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் அண்மையில் தப்பிச் சென்றார்.

குறித்த நபர் அங்கொடையில் திருடிய சைக்கிளை பெற்ற நபர் இதுவரையில் பொலிஸ் நிலையத்தில் சரணடையவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நோயாளி தான் திருடிய சைக்கிள் தொடர்பில் எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

அந்த சைக்கிளை யாரோ ஒருவர் பொறுப்பேற்றுள்ளார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த சைக்கிளில் கொரோனா பரவும் அளவிற்கு கிருமி இல்லை என சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சைக்கிள் தொடர்பில் அச்சம் அடையத் தேவையில்லை. எனினும் சைக்கிள் பெற்றுக் கொண்ட நபரை கண்டுபிடிப்பது அவசியம் என அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று தற்போது ஓரளவிற்கு குறைவடைந்துள்ளதாக சுகாதார பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்