மீண்டும் சமூக மட்டத்தில் கொரோனா நோயாளி

பொலன்னறுவை லங்காபுர பிரதேச செயலகத்தின் பணியாளர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ளார்.

லங்காபுர பிரதேச செயலக பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் குறித்த நோயாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இதனையடுத்து லங்காபுர பிரதேச செயலகம் மூடப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நீண்ட நாட்களாக சமூக மட்டத்தில் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்படாத நிலையில், லங்காபுர பிரதேச செயலகத்தில் அடையாளம் காணப்பட்டவர் குறித்து அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.Share

ஆசிரியர்