போட்டி போட்டு விபத்துக்குள்ளாகிய பேருந்து

போட்டி போட்டுக் கொண்டு பயணித்த தனியார் பேருந்து ஒன்று வேகக் கட்டுப்பாட்டையிழந்து தொலைத் தொடர்பு நிறுவனத்துக்குச் சொந்தமான கம்பத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த பேருந்து வீதியில் உள்ள கம்பத்துடன் மோதியதால் அருகில் இருந்த மின்சார மீள்பிறப்பாக்கி அறை விபத்திலிருந்து தப்பிக் கொண்டது. யாழ்ப்பாணம் காரைநகர் வீதி, மானிப்பாய்-சுதுமலைச் சந்தியில் இன்று காலை இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.மிக நீண்ட காலமாக பொறுப்பற்ற விதத்தில் மானிப்பாய்-சுதுமலைச் சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீதி அபிவிருத்தித் திணைக்களத்துக்குச் சொந்தமான வாகனங்களால் அவ் வீதியில் பயணிப்பவர்கள் பாரிய சிரமங்களை எதிர்கொள்வதுடன், விபத்துக்களும் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மனித உயிர்கள் தமது வாகனத்தில் இருக்கின்றனர் என்ற சிந்தனைகள் இல்லாமல் சவாரி செய்யும் தனியார் பேருந்து ஓட்டுநர்களாலும் இவ்வாறான விபத்துக்கள் இப் பகுதியில் இடம்பெறுகின்றது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆசிரியர்