மேல் மாகாணத்தில் திடீர் சுற்றிவளைப்பு: 1,662பேர் கைது

மேல் மாகாணத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில் 1662 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் ஊடக பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களே கடந்த 24 மணித்தியாலங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் 696பேர் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள், 748பேர் போதைப்பொருட்களுடனும் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

இதில் 91 பேர் குற்றவியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது.

ஆசிரியர்