அதிகரித்து யாரும் கொரோனா நோயாளிகள்

நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் நாடு திரும்பியவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

சென்னையில் இருந்து நாடு திரும்பிய 2 பேருக்கும், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய தலா ஒவ்வொருவருக்கும் என நான்கு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இலங்கையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 947 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 9 பேர் குணமடைந்து வெளியேறியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களது மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 798 ஆக உயர்வடைந்துள்ளது.

இதனால் தற்போதைய நிலையில் நாடு முழுவதும் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருபவர்களத எண்ணிக்கை 138 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் சிகிச்சை பலனின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்