கொழும்பில் ஆட்டோ திருடன்

கொழும்பின் புறநகர் பகுதியான கொலன்னாவ பிரதேசத்தில் வயோதிப பெண் ஒருவர் ஏமாற்றப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

75 வயதான பெண்மணி ஒருவர் முச்சக்கர வண்டியில் பயணித்துள்ளார். அவர் அதே முச்சக்கர வண்டியில் மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன் போது குறித்த வயோதிப பெண்மணி படி ஏற முடியாமல் சிரமப்பட்டதனை அவதானித்த முச்சக்கர வண்டி சாரதி அவருக்கு உதவி செய்துள்ளார்.

எனினும் இரண்டு மூன்று படிகள் இறங்கிய பின்னர் வயோதிப பெண்ணின் கையில் இருந்த 28 ஆயிரம் ரூபா பணத்தை பறித்து சென்றுள்ளார்.

அங்கிருந்தவர்களை அவரை பிடிக்க முயற்சித்த போதிலும் அவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் அருகிலிருந்து சிசிடீவி கமராவில் பதிவாகியுள்ளது.

இவ்வாறான மோசடி சம்பவங்கள் பல இடங்களில் இடம்பெற்று வருவதாகவும் பொதுமக்கள் அது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்