ஜனநாயகத்தை இல்லாதொழிக்க முற்படக்கூடாது – ராஜித

ஜனநாயகத்தை இல்லாதொழிக்க முற்படக்கூடாது என நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “19 ஆவது திருத்தச்சட்டமானது நாட்டுக்கு தேவையான ஒன்றாகும். அதில் உள்ள குறைப்பாடுகளை நீக்கவே நாம் முற்பட வேண்டும்.

இதனை செய்யாமல், அதில் உள்ள ஜனநாயகத்தை இல்லாதொழிக்க இவர்கள் முற்படக்கூடாது.

நாம் 19 ஆவது திருத்தச்சட்டத்தை பாதுகாக்கவே நாம் முயற்சிக்கிறோம். இதன் ஊடாக அரசாங்கம் பலமடைந்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

இப்படியான ஒரு திருத்தச்சட்டத்தை இல்லாதொழிக்க முற்படுவதானது, சர்வாதிகார ஆட்சிக்கு வழிகோலுவதாகவே அமைந்துள்ளது“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆசிரியர்