செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு!

மட்டு. கரடியனாறு பகுதியில் துப்பாக்கிச்சூடு!

0 minutes read

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்த நிலையில், மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கரடியனாறு பங்குடாவெளிச் சந்தியில் சம்பவதினமான இன்று அதிகாலை 3 மணியளவில் பொலிஸாரின் சமிக்கையை மீறி சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர் படுகாயமடைந்துள்ளார்.

சம்பவத்தில் செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய துசாந்தன் என்பவரது தோள்பட்டடை பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனையடுத்து, அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.