December 2, 2023 8:41 pm

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இன்று ஆரம்பம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

தமிழ் மக்களின் விடுதலைக்காக ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன.

யாழ். நல்லூரில் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்து ஈகச் சாவைத் தழுவினார்.

நினைவேந்தல் நிகழ்வுகள் வழமை போல் இம்முறையும் தியாக தீபத்தின் நினைவிடத்தில் நடைபெறுவதற்குரிய ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று ஆரம்பமாகும் நினைவேந்தல் நிகழ்வுகள் எதிர்வரும் 26ஆம் திகதி வரையான 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.

தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசமெங்கும் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்