செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்! – வாள்வெட்டில் ஐவர் படுகாயம்

‘லியோ’ படம் பார்க்கச் சென்ற இளைஞர் குழு மோதல்! – வாள்வெட்டில் ஐவர் படுகாயம்

0 minutes read

மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் வாள் வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விஜய் நடித்து வெளியான லியோ படம் பார்க்கச் சென்ற இளைஞர்களுக்கிடையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இரண்டு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட முரண்பாடு கைகலப்பாக மாறி அது வாள்வெட்டில் முடிந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் 5 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். இவர்களில்  4 பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

வணக்கம் இலண்டன்

Vanakkam London – Sri Lanka, London and world Latest Breaking News and Headlines

@2013 – 2024 | Vanakkam London | All Rights Reserved.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More