மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்தியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரவி செனவிரத்னவை கஸ்கிஸை நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்திய போது, அவரை நவம்பர் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை பகுதியில் மெரின் டிரைவ் வீதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி 2 வாகனங்களுக்கு விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் வெள்ளவத்தை பொலிஸாரால் நேற்று இரவு இவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.