December 2, 2023 6:34 pm

யாழில் தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கிய சிறுமி மரணம்!

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email
தலையில் விறைப்பு ஏற்பட்டு மயங்கி சரிந்த சிறுமி ஒருவர் சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

தண்ணீர் தாங்கி வீதி, குருநகரைச் சேர்ந்த ஜேசுதாஸ் அனோஜினி (வயது 10) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சென் ஜேம்ஸ் மகளிர் கல்லூரியில் தரம் 5இல் கல்வி கற்று வரும் குறித்த சிறுமி வீட்டில் இருந்தபோது தலையில் விறைப்பு ஏற்பட்டதையடுத்து மயங்கியுள்ளார்.

இதையடுத்து யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். இதையடுத்து இடம்பெற்ற பிரேத பரிசோதனைக்குப் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Facebook
Twitter
WhatsApp
Telegram
Email

ஆசிரியர்