செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை வென்ற இலங்கை அணி நாடு திரும்பியது!

ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப்: 5 பதக்கங்களை வென்ற இலங்கை அணி நாடு திரும்பியது!

1 minutes read

தாய்லாந்தில் நடைபெற்ற 2026ஆம் ஆண்டுக்கான ஆசிய உடற்கட்டமைப்பு சாம்பியன்ஷிப் (IFBB Asian Bodybuilding Championship – 2026) போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் பங்கேற்ற அணி, ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்கள் உட்பட மொத்தம் 05 பதக்கங்களை வென்று இன்று புதன்கிழமை (18) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

ஆசியப் பிராந்திய நாடுகளைச் சேர்ந்த உடற்கட்டமைப்பு வீரர்களின் பங்கேற்புடன், இம்மாதம் 13ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை தாய்லாந்தின் பட்டாயா  நகரில் இப்போட்டிகள் நடைபெற்றிருந்தன.

இதில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திப் போட்டியிட்ட சூரி காத், செனால் பெரேரா மற்றும் அனுஷ்க டில்ஷான் ஆகியோர் இந்த 05 பதக்கங்களையும் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

வெற்றிவாகை சூடிய குறித்த வீரர்கள் இன்று அதிகாலை 12.00 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்குச் சொந்தமான UL-307 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்களை வரவேற்பதற்காக விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தித் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழுவொன்றும், வீரர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எனப் பெருந்திரளானோரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.