செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இலங்கை முறையற்ற அதிபர் நியமனங்கள், பாடசாலை ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்

முறையற்ற அதிபர் நியமனங்கள், பாடசாலை ஊழல்கள் தொடர்பில் விசாரணைகள் அவசியம்

1 minutes read

மத்திய மாகாண பாடசாலைகளில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற அதிபர் நியமனங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் அதே வேளை சில பாடசாலைகளில் இடம்பெற்ற நிதி மோசடிகள் தொடர்பிலும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மத்திய மாகாண ஆளுநர் டாக்டர் ஹர்ஷ சுரங்க பெர்ணான்டோவிட் கோரிக்கையொன்றை முன் வைத்திருக்கின்றார்.

ஆளுநரை சந்தித்து கலந்துரையாடிய அவர் அதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடுகையில்,

மத்திய மாகாண பாடசாலைகளில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நாம் பேசினோம். இந்த அரசாங்கம் வந்து இரண்டு வருடங்களாகியும் நாம் முன் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை.

முக்கியமாக கடந்த காலங்களில் மத்திய மாகாண பாடசாலைகளில் முறையற்ற அதிபர் நியமனங்கள் இடம்பெற்றுள்ளன. பல நிதி மோசடிகள் ஊழல்கள் இடம்பெற்றுள்ளன.

அட்டன் கல்வி வலய பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற ஊழல்கள் குறித்து நாம் எழுத்து மூலமான முறைப்பாடொன்றை ஆளுநரிடம் கையளித்துள்ளோம்.

தனது நிர்வாகத்தில் அப்படி நடக்காது என ஆளுநர் கூறினாலும் கடந்த கால ஊழல்கள் குறித்து விசாரணை நடத்தும் கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு உள்ளது.

அதிபர், ஆசிரியர்கள் இடமாற்றம் போன்று கல்வி அதிகாரிகளும் உரிய காலத்தில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் எனக் கூறினோம்.

சில வலயக் கல்வி காரியாலயங்களில் 13 வருடங்கள் வரை சிலர் பணி புரிகின்றனர். இந்நிலைமை மாற வேண்டும். அட்டன் வலயக்க கல்வி காரியாலய புதிய கட்டிடம் தொடர்பில் எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இடம்பெறவில்லை. தித்வா அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பல பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

அதற்கு தீர்வுகள் இல்லை. கஷ்டப்பிரதேச பாடசாலை அதிபர்களுக்கான கொடுப்பனவுகள் முறையாக வழங்கப்படவில்லை. எனவே இது குறித் ஆளுநர் உரிய தரப்பினர் ஊடாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்துள்ளோம்.

உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆளுநர் எமக்கு உறுதியளித்தார். இரு வாரங்களில் நாம் இது குறித்து அவரிடம் மீண்டும் பேச்சு நடத்தவுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் மல்லியகொடை , நுவரெலியா மாவட்ட செயலாளர் இந்திரசெல்வன் உள்ளிட்ட சங்கத்தின் பிரதேச உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.