ஈக்குவடாரில் கொரோனா தொற்றினால் இறந்த உடலுக்கான அவலம் நிலை

தென் அமெரிக்க நாடான ஈக்குவடாரில் கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் உடலை தெருக்களில் வீசிச் செல்லும் அவலம் நடந்துள்ளது.

கொரோனா தொற்றினால் உலகம் முழுவதும் 81 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஈக்குவடார் நாட்டில் 172 பேர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கு போதிய மரப்பெட்டிகள் கிடைக்காத காரணத்தினால் அட்டைப் பெட்டிகளில் உடல்களை வைத்து அடக்கம் செய்து வருகின்றனர். மேலும் தொற்று நோய் பயம் காரணமாக இறந்தவர்களின் உடலை கிழிந்த துணியில் வைத்து சாலையில் இழுத்துச்செல்லும் வீடியோவும், இறந்தவர்களின் உடலை சாலையில் வீசிச் செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது. இதனை இணையத்தில் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆசிரியர்