டிக்டாக் நிறுவனத்தை அமெரிக்காவுக்கு விற்கவி ல்லை என்றால் தடை|அதிபர் ட்ரம்ப்

டிக்டாக் நிறுவனத்தை செப்டம்பர் 15ம் திகதிக்குள் ஏதேனும் ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு விற்காவிட்டால், அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்படும் என அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்தியாவை தொடர்ந்து டிக்டாக் செயலியின் செயல்பாட்டை அமெரிக்காவில் தடை செய்ய ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், டிக்டாக் நிறுவனத்தை கைப்பற்றுவது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்ய நாதெள்ளா, ட்ரம்ப்புடன் ஆலோசனை நடத்தினார்.

தொடர்ந்து, டிக்டாக் நிறுவனத்தை விலைக்கு வாங்குவது குறித்து ஆய்வு செய்து வருவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், செப்டம்பர் 15ம் தேதிக்குள் மைக்ரோசாப்ட் அல்லது ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு, பைட் டான்ஸ் நிறுவனம் டிக் டாக் செயல்பாட்டை விற்க வேண்டும் அல்லது அதற்கு தடை விதிக்கபடும் என தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்