செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home உலகம்இந்தியா உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் | விஜய் பிரச்சாரம்

உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன் | விஜய் பிரச்சாரம்

1 minutes read

”நான் பல வலிகளை தாங்கிக்கொண்டிருக்கிறேன். உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன்” என இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் தெரிவித்தார்.

விஜய் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் தொடங்கிய மார்ச் 30ஆம் திகதி அன்று சென்னை பெரம்பூர் தொகுதிக்கான வேட்பு மனுவை மாநில நிர்வாகிகளுடன் இணைந்து கட்சியின் தலைவரான விஜய் தாக்கல் செய்தார்.

இதைத் தொடர்ந்து ஏப்ரல் 2ஆம் திகதியான இன்று திருச்சி கிழக்கு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை விஜய் தாக்கல் செய்தார்.

இதை தொடர்ந்து திருச்சி மரக்கடை பகுதியில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய விஜய், ” தமிழக வெற்றி கழகத்தின் வேட்பாளர்கள் வேறு. நான் வேறல்ல. உங்களை ஒருபோதும் ஏமாற்ற மாட்டேன். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன்.

அத்துடன் பிரச்சாரத்தில் திரண்டு இருந்த மக்களை பார்த்து, கேஸ் புக் செய்தால் புக் ஆகிறதா? சிலிண்டர் வீட்டிற்கு வருகிறதா? சிலிண்டர் பற்றாக்குறையால் எவ்வளவு பிரச்சனை? எத்தனை உணவகங்கள் மூடப்பட்டுள்ளன?.. மத்திய அரசோ மாநில அரசோ கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் இருந்திருந்தால்.. இதனை தவிர்த்து இருக்கலாம். முதல்வர் ஸ்டாலினை கேட்டால்.. இதற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்பார்கள். ஆனால் அவருக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் .. உடனடியாக புதுடெல்லிக்கு செல்வார். திமுகவும், பாஜகவும் ஒன்றுதான்.

அதன் பிறகு, திமுக கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை பட்டியலிட்டு இதெல்லாம் சொன்னீர்களே….! செய்தீர்களா..? என அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார்.

இது சாதாரண தேர்தல் அல்ல. ஒரு தலைமுறைக்கான தேர்தல். வசதியான வாழ்க்கையை விட்டு விட்டு உங்களுக்காக வந்திருக்கிறேன். பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன். நான் பல வலிகளை தாங்கிக் கொண்டு தான் உங்களுக்காக இங்கு வந்து இருக்கிறேன்.” என்றார்.

முன்னதாக திருச்சி மரக்கடை பகுதிக்கு வந்த விஜய், அங்கு உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மரியாதை செலுத்திய பிறகு பிரச்சாரத்தை தொடங்கினார்.‌

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.