செய்திகள்

புகைப்படத் தொகுப்பு

Home சினிமா விஜயின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு புது சிக்கல்

விஜயின் ‘ஜனநாயகன்’ படத்திற்கு புது சிக்கல்

1 minutes read

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய்- எதிர்வரும் மூன்றாம் திகதி பெங்களூருவில் அம் மாநில முதல்வர் டி கே சிவக்குமாரை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த திட்டமிடப்பட்டிருந்தார். இந்நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு தினமும் 3500 கன அடி  நீரை காவிரியில் திறந்து விட வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது.

இதனால் பெங்களூருவில் கன்னட அமைப்பினர் காவிரி  நீர் திறப்பிற்கு எதிராக திடீரென்று போராட்டம் நடத்தினர். அதிலும் குறிப்பாக விஜயின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் ஓடிக்கொண்டிருக்கும் படமாளிகைக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல காட்சிகள் ரத்து செய்யப்பட்டது.

மேலும் காவிரி நீர் திறப்பிற்கும், தமிழ்த் திரைப்படங்களை கர்நாடகத்தில் வெளியிடுவதற்கும் கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். இதனால் பல படமாளிகைகளில் ஜனநாயகனின் திரைப்படக் காட்சி ரத்து செய்யப்பட்டு, ‘ஸ்பைடர் மேன்’ எனும் ஆங்கிலத் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது.

மேலும் பட மாளிகையின் வளாகங்களில் அமைக்கப்பட்டிருந்த ‘ஜனநாயகன்’ விஜயின் கட் அவுட்டுகளும் அகற்றப்பட்டு வருகிறது. இது தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ஏற்பட்ட புது சிக்கலால் அவரது ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

சினிமா

விமர்சனம்

கட்டுரை

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Adblock Detected

Please support us by disabling your AdBlocker extension from your browsers for our website.